குமரி மாவட்டம் மயிலோடு மடத்து விளையை சேர்ந்தவர் சேவியர் குமார் (46) தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர். கன்னியாகுமரி அரசு பஸ் டெப்போவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி மயிலோடு பங்கு பணியாளர் அலுவலகத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டார். அப்போது முறையான விசாரணை வேண்டும் என கேட்டு உடலை பெறாமல் போராட்டம் நடத்தினர். இதனால் அவரது உடல் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலய கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஏற்கனவே சேவியர் குமார் உடலை அங்கு இருந்து எடுத்து குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று உறவினர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் உடனே குடும்பக் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இன்று காலை பத்மநாபபுரம் உதவி கலெக்டர் வினை குமார் மீனா, குளச்சல் ஏ எஸ் பி பிரவீன் கவுதம், மற்றும் அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் முன்னிலையில் மைலோடு ஆலய கல்லறை தோட்டத்திலிருந்து சேவியர் குமார் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அவரது குடும்ப கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்ய பணிகள் நடந்து நடைபெற்றது. இதில் அவரது உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.