அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், உதகை பிரம்மோற்சவம் நடைபெற்றது
புஷ்ப பல்லாக்கில் அம்மன் காட்சியளித்தார்;
நீலகிரி மாவட்டம் உதகையில் சித்திரை தேர் திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக நல மன்றம் சார்பில் அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது ரதம் வாகனத்தில் ஸ்ரீ புஷ்ப பல்லாக்கு தரிசனத்தில் அம்மன் அருள் பாலித்தார் இதில் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அலங்காலங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது மதியம் அன்னதானங்களுடன் அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது இதில் பொதுமக்கள் மாவிளக்கு ஏந்தியும் விளக்குகள் எங்கேயும் அம்மனை தரிசித்து ஊர்வலமாக சென்றனர் மேளதாளங்கள் முழங்க பொதுமக்கள் ஆடல் பாடலுடன் அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்