மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து

பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்;

Update: 2025-03-24 15:04 GMT
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த 03.03.2025 அன்று முதல் 23.03.2025 வரை 21 நாட்கள் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சியில், நீலகிரி மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டு, பயிற்சியை பெற்று நிறைவு செய்த 5 ஆப்த மித்ரா தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன் உட்பட பலர் உள்ளனர்.

Similar News