வன விலங்குகளை வேட்டையாட முயன்ற தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏழு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.*
வன விலங்குகளை வேட்டையாட முயன்ற தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏழு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.*;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏழு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சேத்தூர் ஊரக காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆராய்ச்சி ஊரணி ஓடை பகுதியில் உள்ள விவசாய தோப்பில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த தந்தை அந்தோணி ( 56 ) அவரது மகன் மதன்குமார் ( 24 ) ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 7 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.