வேலூர்: புதிய கட்டிடங்களுக்கு அனுமதி அவசியம்!
அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.;
வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட ஊரக பகுதிகளில், புதிய வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட விரிவாக்கப் பணிகள் அனுமதியின்றி மேற்கொள்ள முடியாது என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.