வேலூரில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது .;
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 543 மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.