நலவாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் ஆட்சியர் 3 நபர்களுக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 24) ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 3 நபர்களுக்கு சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.இந்நிகழ்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயபாரதி உட்பட பலர் உடனிருந்தனர்.