கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் வடிவேலு

கீழடி அருங்காட்சியகத்தை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வையிட்டார்;

Update: 2025-03-25 04:53 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி தொல்லியல் அகழாய்வுத் தளத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்துக்கு பிரபல நடிகர் வடிவேல் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த ஆய்வுத் தளம் தமிழர்களின் பண்டைய நாகரிகம் பற்றிய முக்கிய தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பழமையான பொருள்கள், மண்பாண்டங்கள், எழுத்துக்களுடன் கூடிய பொருள்கள் மற்றும் கீழடி அகழாய்வில் கிடைத்தவை குறித்து அவர் ஆவலுடன் ஆராய்ந்தார். அருங்காட்சியக அதிகாரிகள் நடிகர் வடிவேலுக்கு அங்கு காட்சிப்படுத்தப்பட்ட முக்கிய பொருள்கள் பற்றிய விளக்கங்களை வழங்கினர். கீழடி அகழாய்வு தமிழர்களின் முன்னேற்றம் மற்றும் அறிவியலின் வளர்ச்சி பற்றிய புதிய தகவல்களை வழங்குவதாகவும், இது பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது எனவும் அவர் கருத்து தெரிவித்தார். அருங்காட்சியக வளாகத்தில் உள்ள புகைப்படங்களை எடுத்துக் கொண்டதோடு, பொதுமக்களுடன் சந்தித்து உரையாடினார். அவரது வருகையால் அங்கு திரண்டிருந்த மக்கள் உற்சாகமடைந்தனர்.

Similar News