அரக்கோணம்: ரயில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்!

ரயில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்!;

Update: 2025-03-25 04:57 GMT
அரக்கோணம் ரயில் நிலையத்திலும், இவ்வழியாக செல்லும் ரயில்களிலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் விதமாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பிளாட்பாரங்களிலும், ரயில்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் மெமு ரயில் 3-வது பிளாட்பாரத்தில் வந்த போது போலீசார் ரயில் பெட்டிகளில் சோதனை செய்தனர். அப்போது ரயில் பெட்டியில் இருக்கைக்கு கீழ் கேட்பாரற்று அடுக்கி வைத்திருந்த 21 மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சிறப்பு பறக்கும் படை தாசில்தார் ரவியிடம் ஒப்படைத்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News