ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் பகுதியாக ரத்து

ரயில்வே கோட்ட நிர்வாகம் தகவல்;

Update: 2025-03-25 05:09 GMT
ஜோலார்பேட்டையில் சிக்னலிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி கீழ்க்கண்ட ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ஈரோட்டில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் (வண்டி எண்-56108) இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் 29, 30 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல் ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை-ஈரோடு ரெயில் (வண்டி எண்-56107) இன்று மற்றும் 29, 30 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். இந்த தகவல், சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News