அரக்கோணம் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமானம் தொடக்கம்
கூடுதல் வகுப்பறை கட்டுமானம் தொடக்கம்;
அரக்கோணம் நகராட்சி நேருஜி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்காக பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் லட்சுமி, கவுன்சிலர்கள் பாபு, சாமுண்டீஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர். பணிகள் விரைவாக முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.