ஆதி திராவிடர்கள் புகார்களை பதிவு செய்ய கட்டணமில்லா எண் அறிமுகம்
சிவகங்கையில் ஆதி திராவிடர்கள் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது;
சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர், வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடர்பான முறையீடுகளை, 18002021989 அல்லது 14566 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.