லெனின் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பேரவை கூட்டம்
திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது;

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலா் ஸ்டாலின் தலைமை வகித்தாா். மாநில தொழிற்சங்க அமைப்பாளா் ராஜசேகரன், மாவட்டப் பொருளாளா் சண்முகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்டுப்பாடு இல்லாத மின்சாரத்தை வழங்க அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், சிவகங்கை தெற்கு மாவட்ட துணைச் செயலராக ரஞ்சித்குமாா், வடக்கு மாவட்ட துணைச் செயலராக கருப்பையா, மாவட்டப் பொருளாளராக சண்முகவேல், திருப்பத்தூா் ஒன்றியச் செயலராக கே.முத்து, கல்லல் ஒன்றியச் செயலராக வி.காா்த்திக், சிங்கம்புணரி ஒன்றியச் செயலராக என்.நடராஜன், சாக்கோட்டை ஒன்றியச் செயலராக எஸ்.பாண்டியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.