நீலகிரி மாவட்டம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு குன்னூர் அனைத்து பொதுநல வணிகர் சங்கம் ஆதரவு

பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டு உரையாடினர்;

Update: 2025-03-25 06:13 GMT
  • whatsapp icon
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை மற்றும் கோடை சீசனின் போது வார விடுமுறை நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும்,மற்ற நாட்களில் 6ஆயிரம் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல் குன்னூர் நகராட்சியில் கடைகளை இடித்து புதிய கடைகள் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது,மேலும் மாவட்டத்தை பாதிக்க வகையில் பல்வேறு வகையிலான 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த வணிகர்கள் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள 60 சங்க நிர்வாகிகளுடன் ஒன்றிணைந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதற்கட்டமாக வரும் 29-ம் தேதி வியாபாரிகள் தங்களது கடைகளில் கருப்பு கொடியேற்றி அரசின் கவனத்தை ஈர்ப்பது எனவும்,ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி மாவட்டம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குன்னூர் அனைத்து வணிகர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற அனைத்து வியாபாரிகளும் குன்னூர் நகர மார்க்கெட் கடைகளை இடித்து கட்ட கூடாது,மேலும் பல்வேறு வகையில் வியாபாரிகள் பாதித்து வருவதால் மாவட்ட வணிகர் சங்கம் அறிவித்துள்ள போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒத்துழைக்க முடிவு செய்தனர்.கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான பங்கேற்றனர்.

Similar News