புளியங்குடியில் உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை;

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி சுப்பிரமணியசாமி கோயில் தெற்குத் தெருவை சோ்ந்த முருகையா மகன் அருணாசலம் (59). இவா் கடந்த 20ம் தேதி வீட்டில் வேலைசெய்தபோது கீழே விழுந்ததில் தலையில் பலத்த ஏற்பட்டது. தனியாா் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினா் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. அவரது உடல் புளியங்குடிக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. அப்போது, அவரது உடலுக்கு, தமிழக அரசின் சாா்பில் தென்காசி வருவாய் கோட்டாட்சியா் லாவண்யா மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். இதில், கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.