
குளச்சல் இலப்ப விளை அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குளச்சல் நகர்மன்றத் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. காலையில் குருந்தன் கோடு வட்டார மேற்பார்வையாளர் ஜாண்சன் அறிவியல் கண்காட்சியை திறந்துவைத்தார். இப்பள்ளி ஆசிரியை பெல்சி பாய் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமை ஆசிரியை மேரிஆன்றனி பவுஸ் ஆண்டறிக்கை வாசித்தார். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது ஹக்கீம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவி நிஷாபானு ஆகியோர் முன்னிலை வகுத்தனர். விழாவில் பஷீர் கோயா, மருத்துவர் சுகவனேஷ், சுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஷீனத்பாத்திமா, அன்வர் சதாத், மற்றும் நிஷார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நடப்பாண்டில் நடைபெற்ற தேர்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இடையிடையே மாணவ மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் இப்பள்ளி ஆசிரியை மேரிஸ்டெல்லா நன்றி கூறினார்.