
ஆதித்தமிழர்கட்சி குமரி மாவட்டசெயலாளர் கி.குமரேசன் தூய்மை தொழிலாளர்களை பற்றி பேசிய சவுக்கு சங்கருக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கொரோன பேரிடர் காலங்களில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையே தன்னலம் பாராமல் தன் உயிரையும் பணயம் வைத்து பேரிடர் பணியில் முதன்மை பணியான தூய்மை பணியை கடமை என்று எண்ணாமல் மக்கள் பணி என்று உணர்வோடு பணியாற்றியவர்கள் தூய்மை தொழிலாளர்கள். அவர்களை கேவலமாக கொஞ்சம்கூட நாகூசாமல குடிகாரர்கள் என்று கூற, சவுக்கு சங்கருக்கு தூய்மை தொழிலாளர்களை பற்றி பேச உரிமை இல்லை. தூய்மை தொழிலாளர்களையும் அவர்கள் செய்கின்ற பணியையும் கேவலப்படுத்தியும் மேலும் அவர்களை இச்சமூகத்தில் ஏதோ தீண்டத்தகாதவர்கள் போல் சித்தரித்தும் மிக கேவலமாக பேசிய இவர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.