
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் கலெக்டர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவி தொகை வழங்கி, 560 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் தமிழ்நாடு பாரதிய வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் அருள் தலைமையில் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில், - நாகர்கோவிலில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சாலை ஓரங்களில் தள்ளு வண்டிகளில் சர்பத், பழம், காய்கறிகள், கைவினை பொருட்கள் விற்பனை செய்து வாழ்ந்து வரும் ஏழை தொழிலாளர்களான எங்களை நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் வியாபாரம் செய்யக் கூடாது என மிரட்டி வருகிறது. அத்துடன் தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்துமாறு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் நாகர்கோவில் நகர பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏழை மற்றும் சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து வருகிறோம். எனவே விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளனர்.