சி ஐ டி யு தொழிலாளர்கள் ஆதரவு ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்;

Update: 2025-03-25 10:56 GMT
 சி ஐ டி யு தொழிலாளர்கள் ஆதரவு ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon
தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் வாங்கிடவும், பொதுத்துறைகளை விற்பனை செய்வதை கண்டித்தும், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை மாற்றி பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வரக் கோரியும், காலி பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், நிரந்தரத் தன்மை கொண்ட தொழில்களில் காண்ட்ராக்ட் புகுத்தலை கைவிட வலியுறுத்தியும், வேளாண் விளைபொருட்களுக்கு போதிய விலை நிர்ணயம் செய்யக்கோரியும், தனியார் மயமாக்கலை கண்டித்தும் டெல்லி பாராளுமன்றம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    நாகர்கோயில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பணிமனை உதவி தலைவர் பட்டு ராஜா தலைமை தாங்கினார். பணிமனை செயலாளர் பொன் குமார், பொருளாளர் ஜான் ஸ்பின்னி, கன்னியாகுமரி கிளை செயலாளர் பெருமாள், நாகர்கோவில் கிளை உதவி தலைவர் பகவதியப்பன், மத்திய சங்கம் நிர்வாகி ஜான் ராஜன்,சிஐடியு மாவட்ட துணை தலைவர் பொன். சோபனராஜ் ஆகியோர் விளக்கி பேசினார்கள். திரளான தொழிலாளர்கள் பங்கெடுத்தார்கள்.

Similar News