விடுதி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்;

சிவகங்கை மாவட்டம், 2025 – 2026ஆம் ஆண்டிற்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர்கள் சேர்க்கைக்கு, வருகின்ற 06.04.2025 ஆம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, ஆடுகள தகவல் தொடர்பு மையத்தினை 95140 00777 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்