திமுக வர்த்தக அணி சார்பில் பத்தாம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி சார்பில் தமிழக முதல்வர் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவாக முன்னிட்டு பத்தாம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு அரசு தேர்வு எழுதும் பொருட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது;

Update: 2025-03-25 13:11 GMT
நாமக்கல் மாவட்டம் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி சார்பில் குமாரபாளையம் சின்னப்ப நாயக்கர் பாளையத்தில் செயல்படும் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் வருகின்ற 28ஆம் தேதி அரசு பொதுத்தேர்வு எழுத உள்ளனர் மாணவ மாணவிகள் தேர்வுக்கு தயாராகும் பொருட்டு திமுக தலைவர் தமிழக முதல்வரும் ஆன மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி முன்னிலையில் எழுது பொருள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிரி தலைமையேற்று மாணவ மாணவிகளுக்கு உபகரணங்களை வழங்கி மாணவ மாணவிகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் தமிழ் வழி கல்வி மூலம் ஆங்கிலமும் நமது துணைப்பாடமாக எடுத்து கல்வி கற்று இன்று உலகத்தில் தமிழன் செல்லாத இடமே இல்லை அனைத்து நாடுகளிலும் தமிழன் சிறந்து விளங்க காரணம் நமது தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் வகுத்த பாதைகளை காரணம் அதனையும் மிஞ்சி தற்பொழுது நமது முதல்வர் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி அனைத்து மாணவ மாணவிகளும் பயன்பெறும் வகையில் பார் போற்றும் முதல்வராக சிறந்து விளங்குவதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் நந்தகுமார் பரமன் பாண்டியன் கோவிந்தசாமிநாதன் மற்றும் கலை இலக்கிய பகுத்தறிவு மாவட்ட துணை அமைப்பாளர் விடியல் பிரகாஷ். நகர் மன்ற உறுப்பினர் இனியா. ராஜ் திருச்செங்கோடு ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News