நாடக விழிப்புணர்வு பிரச்சாரம்
மனித வனவிலங்கு முரண்பாடுகளை தடுப்பது குறித்து வீதி நாடக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது;
கூடலுார் வனக் கோட்டத்தில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் (TBGPCCR) மூலம் மனித வனவிலங்கு முரண்பாடுகளை தடுப்பது குறித்து வீதி நாடக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாகbமாவட்ட வன அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேரங்கோடு மற்றும் காவயல் பகுதிகளில் வீதி நாடக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனித வனவிலங்கு முரண்பாடுகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நாடகமும் வனவிலங்குகளுடன் ஒன்றி வாழ்வதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.