காட்டு யானையை விரட்டும் பணியில் வரத்துறையினர்
அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை;
சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி ஆண்டுதோறும் காட்டு யானைகள் நீலகிரி மாவட்டத்தை நோக்கி வருவது வழக்கம் இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள ரன்னிமேடு ரயில் நிலையத்தில் நான்கு காட்டு யானைகள் நேற்று முதல் முகாமிட்டிருந்தது தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் இன்று காலை முதல் போராடி நான்கு காட்டு யானைகளையும் விரட்டியடித்தனர்.