தமிழக வெற்றி கழகத்தின் விவசாய அணி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்
நூற்றுக்கு மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்;
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நீலகிரி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் விவசாய அணி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பகுதியில் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் விவசாய அணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தவெக வினர் கழுத்தில் காய்கறி மாலை அணிந்து நூதன முறையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமான விதைகள் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும், விதைகளின் விலையை வரம்பு கொண்டு வர வேண்டும், விளைவிக்கும் காய்கறிகளுக்கு நிரந்தர விலை தர வேண்டும், பசுந்தேயிலைக்கு விலை ரூபாய் 30 நிரந்தரமாக கிடைக்க வழி செய்ய வேண்டும், உதகையில் விவசாய காய்கறிகள் பதப்படுத்தும் கூடம் அமைத்து தர வேண்டும், விவசாய பயன்பாட்டிற்கு JCB அனுமதி வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தின் பொருளாதாரம் ஆக விளங்கும் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான குடும்பத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடிய வகையில் இ-பாஸ் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், உதகை மார்க்கெட் கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுமான பணிகளால் வியாபாரிகள் பாதிப்படையாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.