பூத் கமிட்டி பொறுப்பாளருமான மைக்கேல் ராயப்பன் ஆகியோர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்தல் தொடர்பாக களஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பூத் கமிட்டி பொறுப்பாளருமான மைக்கேல் ராயப்பன் ஆகியோர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்தல் தொடர்பாக களஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
விடியா திமுக ஆட்சியில் நாள்தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து தமிழ்நாடு சீரழிந்து விட்டது - அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் திமுக அரசுக்கு எதிராக கண்டனம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான மைக்கேல் ராயப்பன் ஆகியோர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்தல் தொடர்பாக களஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் ஏற்பாட்டில், காரியாபட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வரலொட்டி, பெரிய சோழாண்டி, அழகியநல்லூர், கெப்பிலிங்கம் பட்டி, மாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் மற்றும் கிழக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மைக்கேல் ராயப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அதிமுக பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பணிகள் குறித்து பூத் கமிட்டி பொறுப்பாளர் மைக்கேல் ராயப்பன் விரிவாக எடுத்துரைத்தார். இதனையடுத்து, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் பேசுகையில், இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தமிழகத்தில் நாள்தோறும் கொலை கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன என்று குற்றம் சாட்டினார். மேலும் பள்ளி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை தினம் தினம் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். ஆகையால் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் பேசினார். மேலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அஇஅதிமுக வை மாபெரும் வெற்றி பெற செய்வதற்கான ஆலோசனைகளையும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த கள ஆய்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், காரியாபட்டி மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.