நூறு நாள் வேலைக்கான சம்பளம் எங்கே... திருக்காட்டுப்பள்ளியில் மத்திய அரசுக்கு எதிராக பொதுமக்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்;
நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு 4 மாத காலமாக வழங்க வேண்டிய கூலியை கொடுக்காமல் நிறுத்தி வைக்கும் மோடி அரசைக் கண்டித்தும், கூலி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். நூறு நாள் வேலைக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாகம் , கூலியை ரூ. 600 ரூபாய் ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். வார்டு வாரியாக இல்லாமல் வேலைக்கு வரும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஜாப் கார்டு இல்லாதவர்களுக்கு ஜாப் கார்டு வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் கட்டாயமாக வேலை வழங்க வேண்டும். திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பகுதியில் நூறு நாள் வேலையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றிய அமைப்புக் குழு சார்பில் திருக்காட்டுப்பள்ளி இந்தியன் வங்கி எதிரில், செவ்வாயன்று கண்டன ஊர்வலம் ஆர்ப்பாட்டம், நடைபெற்றது. சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.கலைச்செல்வி தலைமை வகித்தார். ஆர்.உதயகுமார், பி.முருகேசன், டி. திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. அபிமன்னன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் நிறைவுறையாற்றினார். இதில், எம்.ரமேஷ், வழக்குறைஞர் எம்.கே.சேகர், பி.பாலச்சந்தர், இ. பன்னீர்செல்வம், டி.வெங்கடேசன், பி.ஜோதிபாசு, ஏ.காளிதாஸ், சி.சிவசாமி, எம்.துரைராஜ் கலந்து கொண்டு பேசினர். இதில், 100 பெண்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் பட்டாணிக் கடைத் தெருவில் இருந்து இந்தியன் வங்கி வரை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த வருவாய் துறையினர், காவல் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் சம்பள பாக்கி வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.