மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு, பணி நிரந்தப்படுத்த வேண்டும் : தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தர்ணா போராட்டம் 

தர்ணா போராட்டம் ;

Update: 2025-03-25 16:54 GMT
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு, பணி நிரந்தப்படுத்த வேண்டும் : தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தர்ணா போராட்டம் 
  • whatsapp icon
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தப்படுத்த வேண்டும். வாரியமே தினக் கூலியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், மாநிலம் தழுவிய மண்டல அளவிலான தர்ணா போராட்டம், தஞ்சாவூர் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலக வாயிலில் நடைபெற்றது.  மண்டல செயலாளர் எஸ். ராஜாராமன் தலைமை வகித்தார். கிளைத்தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் வரவேற்றார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் துவக்கவுரையாற்றினார். தஞ்சை கிளைச் செயலாளர் பி.காணிக்கை ராஜ், நாகப்பட்டினம் கிளைச் செயலாளர் எம். கலைச்செல்வன், திருவாரூர் கிளைச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற மின்ன ஊழியர் அமைப்பின் மாநில செயலாளர் டி.கோவிந்தராஜ் நிறைவுரையாற்றினார். கிளைப் பொருளாளர் எஸ். சங்கர் நன்றி கூறினார். இதில்,  மாவட்ட, மண்டல அளவிலான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு 10 ஆண்டுகள் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் உள்ள 65 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு மின்வாரியமே தினக்கூலியை நேரடியாக வழங்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.  மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லை என்ற மின்துறை அமைச்சரின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என தர்ணா போராட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Similar News

சாவு