வெளிமாநில மது பாட்டில்களை கடத்தியவர் கைது
மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு வெளிமாநில மது பாட்டில்களை கடத்தியவரை பிடித்த திண்டுக்கல் ரயில்வே போலீசார்;

மைசூரிலிருந்து துாத்துக்குடி செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் அருகே வந்தபோது ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணிவெள்ளைசாமி தலைமையிலான போலீசார் ரயிலில் உள்ள பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை மேலூர் சேர்ந்த முத்துஅமர்(23) போலீசாரை கண்டதும் ஒருவித அச்சத்துடன் இருந்தார். போலீசார் அவரை பிடித்து உடைமைகளை சோதனை செய்ததில் அதில் 9 வெளி மாநில மது பாட்டில்கள் இருந்தது. போலீசார் உடனே அவரை பிடித்து திண்டுக்கல் மது விலக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் திண்டுக்கல் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் வந்த அவர்கள் இக்கடத்தலில் ஈடுபட்ட முத்துஅமரை, கைது செய்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.