மாவட்டத்தில் செயல்படுத்தும் விதமாக அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் குழு வருகை

மாவட்டத்தில் செயல்படுத்தும் விதமாக அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் குழு வருகை;

Update: 2025-03-29 14:06 GMT
மாவட்டத்தில் செயல்படுத்தும் விதமாக அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் குழு வருகை
  • whatsapp icon
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் திட்டங்களை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தும் விதமாக அறிந்து கொள்ள வருகை தந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் குழுவிற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் எடுத்துரைத்தார். விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல், குழந்தைகள் டிஜிட்டல் திரை நேரத்தை குறைத்து ஆக்கப்பூர்வமான செயல்களில் அவர்களை மடைமாற்றம் செய்வதற்கான விழிப்புணர்வு, குழந்தைகளுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் சித்திரக்கதை நூலகம்(காமிக் நூலகம்), அறிவியல் பரிசோதனைகள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவியல் நிகழ்ச்சி, குழந்தைகள் இலக்கிய திருவிழா உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இந்த பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், உயர்கல்வி சேர்க்கை விகிதம், தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், ஓவியம், சுற்றுச்சூழல் ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், குறிப்பாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே சிறப்பான மேம்பாடுகளை காண முடிகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் திட்டங்களை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தும் விதமாக அறிந்து கொள்ள இன்று வருகை தந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் குழுவிற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் எடுத்துரைத்தார். குறிப்பாக, உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் மாணவர்களின் விகிதத்தை அதிகப்படுத்துதல், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் விகிதத்தை அதிகப்படுத்துதல், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் விகிதத்தை அதிகப்படுத்துதல், உயர்கல்வியில் இந்திய அளவில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சமூக மற்றும் வாழ்க்கை சார்ந்த திறன்களை மேம்படுத்துதல் குறித்தும் எடுத்துரைத்து, இத்திட்டங்களை செயல்படுத்திய விதம், தொடர்ச்சியான செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

Similar News