திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு.

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்;

Update: 2025-03-29 13:56 GMT
திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு.
  • whatsapp icon
கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருக்கோவிலூர் என புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அமைச்சருக்கு கே.என் நேரு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருக்கோவிலூர் பகுதிக்கு வந்த அமைச்சர் பொன்முடி பேருந்து நிலையம் புதிதாக அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த சமூக அலுவலர் கணேஷ், பேருந்து நிலையம் அமைவுள்ளதாக தேர்வு செய்யப்பட்ட இடம் தனி நபருக்கு சொந்தமானது. அந்த இடத்தை தேர்வு செய்வதற்காக பல கோடி ரூபாய் பணம் கைமாறி உள்ளதாகவும் அமைச்சரிடம் எடுத்துரைத்தார். மேலும் பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் பேருந்து நுழைவு வாயில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் உள்ளதால் வயதானவர்கள் செல்வதற்கு கடினம் என கூறினார். அப்போது அமைச்சர் பொன்முடி இதேபோலத்தான் விழுப்புரத்தில் தான் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் போதும் அங்குள்ள பொதுமக்கள் கலைஞரிடமே சென்று புகார் தெரிவித்தனர். ஆனால் தற்போது அந்த பேருந்து நிலையம் எப்படி உள்ளது என்பது அனைவருக்குமே தெரியும், அதேபோல திருக்கோவிலூர் பேருந்து நிலையமும் மாறும் என பேசினார். பின்னர் நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி அவர் சொல்வது உண்மைதான் இவ்வளவு தூரம் வந்து எப்படி பேருந்துக்கு செல்ல முடியும் எனவே பேருந்து நிலையத்தை முன் பகுதியில் அமைப்பதற்கோ அல்லது மாற்று இடத்தை தேர்வு செய்தோ உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News