விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக சார்பில் மூன்று இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக சார்பில் மூன்று இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.*;

மத்திய அரசை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுக சார்பில் மூன்று இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம், சேத்தூர் ஊரக காவல் நிலையம் மற்றும் சமுசிகாபுரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை எனவும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க முயல்வதாகவும், தொகுதி மறு சீரமைப்பில் தென் மாநிலங்கள் மற்றும் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.