பொட்டல்பட்டி கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் பெரிய பொட்டல்பட்டி கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ------;

Update: 2025-03-29 14:09 GMT
பொட்டல்பட்டி கிராமத்தில்  உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது
  • whatsapp icon
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், பெரிய பொட்டல்பட்டி கிராமத்தில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்தில் வான்தரும் மழைநீரினை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரைப் பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரிசெய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல், மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடிநீரை செறியூட்டுதல், நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுக்கட்டுப்பட்டைத் தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கொருமரம் வளர்த்தல், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல், நீhநிலைகளின் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுதல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம்(01.04.2024 முதல் 28.02.2025 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்தல்(பிரதிமாதம் 5 - ம் தேதிமற்றும் 20 - ம் தேதி), தினமும் தகுந்த அளவு குடிளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்தல் உள்ளிட்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: நமது மாவட்டத்தில் இருக்ககூடிய 450 கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு வருடமும் தற்போது 6 நாட்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் உள்ளாட்சிகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும், அதுவும் குறிப்பாக மக்களினுடைய பங்களிப்பும் அந்த உள்ளாட்சி நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. கலைஞர் கனவு இல்லத் திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் பயனாளிகளை அரசினுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டு கிராம ஊராட்சி மக்களே அவர்களை தெரிவு செய்ய வேண்டும். கிராம ஊராட்சிகளுக்கு அரசினுடைய மாநில நிதி ஆதாரங்கள், மானியக் குழு நிதி உள்ளிட்ட நிதிகள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்;றன. ஆனால் நமக்கு இருக்கக்கூடிய நிதி ஆதாரங்களை வைத்து பார்த்தால், அதனை எல்லாம் ஒரே நேரத்தில் முடியுமா என்றால் அதற்கு என்று முன்னுரிமை பட்டியல் தயார் செய்து நிறைவேற்றும் வகையிலும், கிராம மக்கள் ஒன்றாக கூடி முடிவு செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. நாம் சுகாதாரத்தில் நிறைய இலக்குகளை அடைய வேண்டும். எனவே தனிநபர் கழிப்பறைகளை நாம் முழுமையாக கட்ட வேண்டும். அதற்கு திட்டங்கள் இருந்தாலும், பொதுமக்களினுடைய பழக்க வழக்கங்களில் மாற்றம் வர வேண்டும். ஏனென்றால் ஒரு ஆண்டுக்கு 365 நாள்களில் சராசரியாக ஒருவர் 8-லிருந்து 12 நாட்கள் ஒரு குடும்பத்தில் உடல்நிலை சரியில்லாமல் செல்கிறது. ஆனால் அதில் பெரும்பாலான நோய்கள் காற்றின் மூலமாகவும், நீரின் மூலமாகவும் பரவக்கூடிய தொற்று நோய்களாக தான் இருக்கின்றன. எனவே, நாம்; சுற்றுப்புறச் சூழலை சுகாதாரமாக வைத்துக் கொள்வதன் மூலமாக அந்த தொற்று நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்க முடியும். அதுமட்டுமில்லாமல் தற்பொழுது நமது பகுதியில் அதிகமான கோடை காலம் நிலவுகிறது .எனவே கோடைகாலத்தில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா என்பதையும், இல்லையென்றால் அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் விவாதிப்பதற்கும், ஏற்கனவே கிராம ஊராட்சிகள் சார்பாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எந்த அளவிற்கு நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பதையெல்லாம் பொதுமக்கள் நேரடியாக பார்க்க வேண்டும். ஊராட்சிகள் மூலமாக செலவிடப்பட்ட செலவினங்களை எல்லாம் எடுத்து பார்த்து, அது சரியாக செலவிடப்பட்டுள்ளதா என்பதையும் பொதுமக்கள் பார்த்து, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய வகையில் இந்த ஒளிவு மறையற்ற வெளிப்படை தன்மையை, நிர்வாக தன்மையை உறுதி செய்யும் என்பதற்கு தான் இந்த கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. விசும்பின் துளி வீழி அல்லால்மற்றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. ஒரு துளி நீர் இல்லாமல் போனால் மண்ணில் ஒரு சிறு பசும்புல் கூட இருக்காது என்று தண்ணீரின் அருமையை பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகிறர். அனைவரும்; தண்ணீரை பாதுகாப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ள வேண்டும். தண்ணீரை வீணாக்கக்கூடாது. மழைநீர் சேகரிப்பை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம் எல்லோருக்கும் தூய குடிநீர், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். அதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த கிராமசபைக்கூட்டம் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். முன்னதாக, வேளாண்மைத்துறையின் மூலமாக நுண்ணீர் பாசனத்திற்கான மானியத்தொகையினையும், இடுப்பொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர், தூய்மை பணியாளர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி பணியாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

Similar News