ஆலங்குளத்தில் புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்:
புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்:;

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் ஊராட்சி அலுவலகம் அருகே ராஜாங்கம் மகன் ஜெயப்பிரகாஷ்(48) என்பவா் நடத்தி வரும் மளிகைக் கடையில் ஆலங்குளம் போலீஸாா் சோதனை நடத்தினா். அதில், 3 மூட்டைகள் மற்றும் 9 சிறிய பொட்டலங்களில் புகையிலைப்பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தனவாம். அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ‘சீல்’ வைத்து, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனா்.