சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்

மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்;

Update: 2025-03-26 01:46 GMT
சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் ராயகிரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ராயகிரி பேருந்து நிலையம் அருகில் தென்மலை நடுத்தெருவைச் சோ்ந்த வீரபாண்டி மகன் காசி (45) மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. சிவகிரி போலீஸாா் வழக்கு பதிந்து, காசியை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Similar News