தோகைமலையில் மேற்கு ஒன்றிய விசிக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமையில் 4 தீர்மாணங்கள் நிறைவேற்றம்;
கரூர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோகைமலை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமையில் தோகைமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்ச் 29 அன்று திருவண்ணாமலையில் நடைபெற உள்ள கட்சி அங்கீகார வெற்றி விழா மாநாட்டில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுதல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோகைமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 ஊராட்சிகளிலும் முகாம் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற களப்பணி ஆற்றிய ஒன்றியத்திற்கு உட்பட்ட பொறுப்பாளர்களுக்கும், திரளாக கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தோகைமலையில் வருகின்ற 06-04-2025 அல்லது 10-04-2025 அன்று நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்துதல். மண்டல, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று ஏப்ரல் மாதம் அல்லது மே முதல் வாரத்தில் தோகைமலையில் பொதுக்கூட்டம் நடத்துதல். கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்க்க ஊடக ஒருங்கிணைப்பாளரை எழுச்சித்தமிழர் நியமிக்கும் வரை தோகைமலை மேற்கு ஒன்றிய ஊடக ஒருங்கிணைப்பாளராக சரத்குமார் செயல்பட ஒன்றிய நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்றது உள்ளிட்ட 4 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.