கோவை: பாலியல் அத்துமீறல் - வழக்கறிஞர் கைது !
20 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கு தொடர்ந்து கிண்டல் செய்வதும்,ஆபாசமாக சைகை காண்பிப்பத வழக்கறிஞர் கைது.;

கோவை, மேட்டுப்பாளையம் முனிசிபால் காலனி மணி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப்.இவரது மகன் அப்துல் ரசாக் (40).இவர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவரை தொடர்ந்து கிண்டல் செய்வதும்,ஆபாசமாக சைகை காண்பிப்பதுமாக இருந்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பெண் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் அப்துல் ரசாக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.போலீசாரின் விசாரணையில் அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் என்பதும்,இவர் தொடர்ந்து பெண்கள் மற்றும் இதே கல்லூரி மாணவிக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதே நபர் கடந்த செப்டம்பர் மாதம் இதே பெண்ணிற்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.