
கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலையில் அடிக்கடி ஏற்ப்படும் தீபவத்தினால் மருந்துவாழ் மலையில் உள்ள அரியவகை மூலிகைகள் வனவிலங்குகள் சேதம் ஏற்ப்படுத்துவதை தடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் வட்டாரச் செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த வழியில் கூறியிருப்பதாவது :- குமரியில் தேசிய பிரசித்திபெற்ற மருந்துவாழ் மலை அமைந்துள்ளது. இங்கு உயிர் காக்கும் மிக முக்கியமான அரிய வகை மூலிகை செடிகள் ஏராளமாக உள்ளது. வழிபாட்டு ஸ்தலம் மற்றும் கிரிவலப் பாதை அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் பக்தர்களும் அடிக்கடி வந்து தரிசித்து வருகிறார்கள். மேலும் இந்த மலையில் ஏராளமான பாதுகாக்க வேண்டிய வன உயிரினங்களும் அறிய வகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன. சமீப காலமாக இந்த மலையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது இந்த தீ விபத்துகளால் அரிய வகை மூலிகை செடிகளும் வன விலங்குகளும் மற்றும் பறவைகளும் உயிரினங்களும் வெகுவாக அழிந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த தீ விபத்து இயற்கையாக நிகழ்கிறதா ? அல்லது சமூக விரோதிகளால் நிகழ்கிறதா ? என்பது தெரியவில்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம் தீ விபத்தினால் அழிந்து வரும் அரிய வகை மூலிகை செடிகளை பாதுகாக்கவும் வனவிலங்குகள் பறவைகள் அழிவதை தவிர்க்கவும் தக்க நடவடிக்கை எடுக்க வட்டாரச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. உடன் பலர் கலந்து கொண்டனர்.