பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்

கருத்தரங்கம்;

Update: 2025-03-26 03:27 GMT
பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்
  • whatsapp icon
கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் டி.எஸ்.எம்., ஜெயின் தொழில் நுட்ப கல்லுாரியில் காலநிலை மாற்றம் மற்றும் பசுமை கட்டடம் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்வி குழும செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ஈஸ்வரன் தங்கராசு முன்னிலை வகித்தார்.காலநிலை மாற்றம், பசுமை கட்டடம், பசுமை திறன் மேம்பாடு மற்றும் நிலையான நடைமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. தொடர்ந்து, மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், பேராசிரியர்கள் முகுந்தன், பெரியசாமி, சுரேஷ், சந்தோஷ்குமார், வீராசாமி, செல்வரசன், அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பசுமை அலுவலர் பூபதிராஜா, தனியார் நிறுவன பொறியாளர்கள் விக்னேஷ் பாலுசாமி, பிரசன்னன், நிவேதினி சிவபாலன் பேசினர்.

Similar News