
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பேரூராட்சி ஆறுமுகபுரம் அங்கன்வாடி மையம் செல்லும் சாலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் பைப்லைன் அமைக்க தோண்டப்பட்டது. ஆனால் பைப்லைன் அமைக்கப்பட்ட பின்னரும் தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் அங்கன்வாடி மையம் செல்லும் பச்சிளம் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சாலையில் டூவிலரில் சென்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் தவறி சாக்கடை ஓடையில் விழுந்து காயம் அடைந்தார். மக்கள் நலனில் அக்கறை காட்டாமல், ஆளும் கட்சி பேரூராட்சி நிர்வாகம் கவன குறைவாக இருந்தது வருகிறது. இதுபோன்ற விபத்துகள் மேலும் தொடராமல் இருக்க பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். என பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி சுபாஷ் என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார்.