வியாபாரிகளுக்கு குடைகள் வழங்கிய முகநூல் நண்பர்கள் குழு
முகநூல் நண்பர்கள் குழு;
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு வெயிலினால் அவதி அடைந்து வரும் சாலையோரம் உள்ள வியாபாரிகளுக்கு இன்று (மார்ச் 26) முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இலவசமாக குடைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.