வாலாஜா கல்லூரியில் சாதியற்ற சமத்துவம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கல்லூரியில் சாதியற்ற சமத்துவம்விழிப்புணர்வு நிகழ்ச்சி;

வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சாதியற்ற சமத்துவம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவிகள் சாதியற்ற சமத்துவம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. உடன் கல்லூரி முதல்வர் பூங்குழலி கலந்து கொண்டார்.