மதுபிரியர்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை

மதுபிரியர்களின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை;

Update: 2025-03-26 05:17 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த வரகூர் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்து,பேருந்து வந்த பின்னர் ஏறி செல்வது வழக்கம். இந்த நிழற்குடையில் மதுபிரியர்கள் மதுகுடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே விட்டு செல்லும் அவல நிலை உள்ளது. மதுபாட்டில்கள் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிழற்குடைக்குள் செல்வதற்கே தயங்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மதுபிரியர்கள் மது அருந்தாமல் தடுப்பதற்கு கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News