கோவை: விசைத்தறியாளர்களுடன் ஆட்சியர் பேச்சு வார்த்தை !

கடந்த ஒரு வாரமாக கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.;

Update: 2025-03-26 05:41 GMT
  • whatsapp icon
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், 2022-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்த கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்த மாவட்டங்களில் நெசவு தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், விசைத்தறி உரிமையாளர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், அன்னூர், தெக்கலூர், சோமனூர், கண்ணம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி சங்கத்தினர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் பூபதி, கடந்த 15 மாதங்களாக கூலி உயர்வு கேட்டு போராடி வருவதாகவும், இதுவரை 10 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை என்றும் கூறினார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை மூடி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறோம். மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். கூலி உயர்வு இருந்தால் மட்டுமே விசைத்தறி துறைகளை காப்பாற்ற முடியும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம் என்று கூறியுள்ளார்.

Similar News