
குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் பிரதீஷ் (29) மார்த்தாண்டத்தில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. பிரதேசின் தாய் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது தந்தை மருத்துவ சிகிச்சைக்காக 2 வருடங்களும் முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து பத்திரம் அடமானம் வைத்து ரூபாய் 5 லட்சத்து 9 ஆயிரத்து 308 ரூபாய் கடன் வாங்கினார். இதற்கு சாட்சியாக பிரதேஷ் கையெழுத்து போட்டுள்ளார். இதற்கிடையில் பிரதிஷ் தாயார் இறந்து விட்டார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதமாக அவர்கள் தவணை தொகையை கட்ட முடியவில்லை. இதனால் பிரதீ சின் செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடன் கொடுத்த நிதி நிறுவன ஊழியர்கள் பிரதீசின் வீட்டுக்கு வந்து எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை விட்டு சுவரில் ஒட்டினர். அதில் மூன்று நாட்களுக்குள் ரூபாய் 26 ஆயிரத்து 127 நிலுவைத் தொகையை கட்ட வேண்டும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அவமானத்தில் பிரதிஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.