கோவை: புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி !

யானைகள் காப்பக உயிரியலாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.;

Update: 2025-03-26 07:13 GMT
கோவை: புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி !
  • whatsapp icon
தமிழ்நாடு அரசின் புதுமையான முயற்சி திட்டத்தின் கீழ், ஆசிய யானை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் சார்பில், யானை-மனித மோதலைத் தடுக்க புதுமையான தொழில்நுட்பங்கள் குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் கோவை கோட்ட வனத்துறை அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் இந்த பயிற்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். வனத்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 23 யானைகள் காப்பக உயிரியலாளர்கள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டனர். பயிற்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் மதுக்கரை அருகே வனப்பகுதி வழியாக செல்லும் தண்டவாளத்தில் காட்டு யானைகளைக் கண்காணிக்க நிறுவப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பார்வையிட்டனர். மேலும், யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையையும் அவர்கள் பார்வையிட்டனர். பயிற்சியின் நிறைவு விழாவில், மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இந்த பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை வனத்துறை விஞ்ஞானி நவீன் மற்றும் உயிரியலாளர் பீட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News