காரமடை: ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலம் மீட்பு

பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வண்டி பாதை புறம்போக்கு இடத்தை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலம் மீட்பு.;

Update: 2025-03-26 07:51 GMT
காரமடை:  ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலம் மீட்பு
  • whatsapp icon
காரமடை அருகே பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வண்டி பாதை புறம்போக்கு இடத்தை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதனிடையே அந்த இடத்தில் மக்கள் சிலர் அத்துமீறி குடிசைகளும் அமைத்ததால், பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து வருவாய் துறையினர், காரமடை போலீசார் உதவியுடன் நேற்று அந்த இடத்திற்கு சென்று, நில அளவை மேற்கொண்டு, வண்டி பாதை புறம்போக்கு நிலத்தை மீட்டனர். மேலும் அப்பகுதியில் கற்களை நட்டு வைத்தனர். இது குறித்து வருவாய் துறையினர் கூறுகையில், முதல் கட்டமாக கற்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அளிக்கப்படும், என்றனர்.

Similar News