அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா
குமாரபாளையம் கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.;

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் தமிழ் இலக்கியங்களில் பெண்கள் எனும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம், செஞ்சுருள் சங்கம், செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம், மற்றும் இலக்கிய மன்ற நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. பன்னாட்டு கருத்தரங்கில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களாக கோவை அரசு கலை கல்லூரி சேனாவரையன், ஆத்தூர் அண்ணா அரசு கலை கல்லூரி அம்பேத்கார், சென்னை வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப நியர் ஆராய்ச்சி உதவி பேராசிரியர் பிரகாஷ், பங்கேற்றனர். ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இலக்கிய மன்ற நிறைவு விழாவில் மாணவ, மாணவியர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசினர். போதை பொருட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.