இலத்தூரில் பூட்டிக் கிடக்கும் ஆண்கள் சுகாதார வளாகம்

பூட்டிக் கிடக்கும் ஆண்கள் சுகாதார வளாகம்;

Update: 2025-03-26 13:24 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள இலத்தூர் பகுதியில் சீவநல்லூர் ஊராட்சியில் ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு புணரமைப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகம் பல மாதங்களாக பயன்படுத்த முடியாத நிலையில் பொருள் கட்சியாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் இதன் அருகிலேயே ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ளதால் தினந்தோறும் அதிகமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் இயற்கை உபாதைகள் கழிக்க முடியாத நிலையில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு கழிப்பிடத்தை கட்டிடத்தை திறந்து விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News