போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி வழங்கும் நிகழ்ச்சி!
வேலூரில் போக்குவரத்து போலீசாரின் நலன் கருதி இன்று காலை கிரீன் சர்க்கிளில் தொப்பிகள், மோர், தண்ணீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
வேலூரில் கோடைக்கால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து போலீசாரின் நலன் கருதி இன்று காலை கிரீன் சர்க்கிளில் தொப்பிகள், மோர், தண்ணீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போலீசாருக்கு வழங்கினார்.