அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவு!
துரோபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு, மகாபாரத சொற்பொழிவு இன்று தொடங்கியது;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் அமைந்துள்ள பழமையான துரோபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு, மகாபாரத சொற்பொழிவு இன்று தொடங்கியது. இந்த மகாபாரத சொற்பொழிவு அடுத்த மாதம் 24.04.2025 வரை 30 நாட்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். இந்த சொற்பொழிவு கேட்க கே.வி.குப்பம் சுற்றுவட்டாரத்தில் இருந்து மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.